மாரி செல்வராஜ் இயக்கத்தில் கார்த்தி?
ADDED : 658 days ago
மாமன்னன் படத்திற்கு பின் வாழை என்கிற படத்தை இயக்கி உள்ளார் மாரி செல்வராஜ். அடுத்து துருவ் விக்ரமை வைத்து புதிய படம் ஒன்றைக் இயக்கவுள்ளார். கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இதில் கபடி வீரராக துருவ் நடிக்கிறார். இதுதவிர ஏற்கனவே மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் புதிய படம் ஒன்றில் நடிப்பதாக அறிவித்தனர்.
இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக நடிகர் கார்த்தியை வைத்து மாரி செல்வராஜ் புதிய படம் ஒன்று இயக்கவுள்ளார். இதனை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துருவ் விக்ரம் படத்தை இயக்கி முடித்தவுடன் கார்த்தி, மாரி செல்வராஜ் படம் தொடங்கும் என்கிறார்கள்.