மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு கூட்டணி
ADDED : 591 days ago
காதலன், மிஸ்டர் ரோமியோ, மனதை திருடி விட்டாய், எங்கள் அண்ணா போன்ற பல படங்களில் பிரபுதேவாவுடன் இணைந்து வடிவேலு நடித்த காமெடி இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அதோடு, சமூக வலைதளங்களில் மீம்களில் பயன்படுத்தபடுகிறது. இது அல்லாமல் பிரபுதேவா இயக்கிய போக்கிரி, வில்லு படங்களிலும் வடிவேலு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.
நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பிரபுதேவா, வடிவேலு இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இயக்குனர் பொன்ராம் உதவி இயக்குனர் ஜி.ம். ராஜா இயக்கும் இப்படத்திற்கு ' லைப் இஸ் பியூட்டிபுல்' என தலைப்பு வைத்துள்ளனர். மே அல்லது ஜூன் மாதத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள்.