உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆடுஜீவிதம் படத்திற்காக முதன்முறையாக வெளியான ரொமாண்டிக் போஸ்டர்

ஆடுஜீவிதம் படத்திற்காக முதன்முறையாக வெளியான ரொமாண்டிக் போஸ்டர்

மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆடுஜீவிதம்'. இயக்குனர் பிளஸ்சி இயக்கியுள்ள இந்த படம் பென்யமின் என்கிற எழுத்தாளர் எழுதிய ஆடுஜீவிதம் என்கிற நாவலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். வரும் மார்ச் 28ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இதில் கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளார்.

இந்த படம் உருவாக துவங்கிய நாளிலிருந்து தற்போது வரை இந்த படத்திற்காக வெளியிடப்பட்ட போஸ்டர்கள் அனைத்திலும் நடிகர் பிரித்விராஜ் மட்டுமே இடம் பிடித்திருந்தார். அது மட்டுமல்ல படத்தில் அவரது வெவ்வேறு விதமான காலகட்டத்திற்கான தோற்றங்களை வெளிப்படுத்தும் விதமாக சீரியஸான லுக்கிலுள்ள போஸ்டர்கள் தான் வெளியாகி வந்தன. இந்த நிலையில் பிரித்விராஜ் அவரது ஜோடியாக நடிக்கும் அமலாபாலும் இணைந்து இருப்பது போன்று முதன்முறையாக ஒரு ரொமான்டிக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !