ஒரே போட்டோவில் மொத்த வதந்திகளையும் விரட்டியடித்த நயன்தாரா
காதலித்து திருமணம் செய்தவர்கள் நயன்தாரா - விக்னேஷ் சிவன். இவர்கள் தங்கள் மகன்களுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை தொடர்ந்து சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு விக்னேஷ் சிவனை இன்ஸ்டாகிராமில் இருந்து அன்பாலோ செய்திருந்தார் நயன்தாரா. இதன் காரணமாக அவர்கள் இருவருக்கும் இடையே ஏதோ கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் பிரியப் போகிறார்கள் என்று சோசியல் மீடியாவில் பலரும் கருத்து பதிவிட்டு வந்தார்கள். அதையடுத்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், முக்கியமான ஒன்றை நான் இழந்து விட்டேன் என்று ஒரு பதிவு போட்டிருந்தார் நயன்தாரா. இது மேலும் பரபரப்பு கூட்டும் விதமாக அமைந்தது.
இந்த நிலையில் இன்று விக்னேஷ் சிவனும் மற்றும் தங்களது மகன்களுடன் விமானத்தில் பயணிக்கும் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் நயன்தாரா. அதோடு நீண்ட இடைவெளிக்கு பிறகு என்னுடைய பாய்ஸ் களுடன் பயணம் செய்கிறேன் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். கடந்த சில தினங்களாக நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கிடையே கருத்து மோதல் இருப்பதாக பரவி வந்த மொத்த வதந்திகளையும் இந்த ஒரு புகைப்படம் விரட்டி அடித்து விட்டது.