மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் சந்தானம், தமன்னா, பூஜா ஹெக்டே
ADDED : 574 days ago
மகா சிவராத்திரியையொட்டி நேற்று கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான விஐபிகள் கலந்து கொண்டு இரவு முழுக்க கண்விழித்து சிவபெருமானை வழிபட்டார்கள். சங்கர் மகாதேவனின் இசை நிகழ்ச்சியோடு நடந்த இந்த சிவராத்திரி விழாவில், நடிகர் சந்தானம், நடிகைகள் தமன்னா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பல திரை உலகினரும் கலந்து கொண்டுள்ளார்கள். பிரம்ம முகூர்த்தத்தில் நடந்த இந்த தியான நிகழ்ச்சியில் நடிகர் சந்தானம் கண்ணீர் விட்டு உருக்கமாக பிரார்த்தனை செய்து இருக்கிறார். அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.