மீண்டும் வில்லன் அவதாரம் எடுக்கும் பரத்!
ADDED : 543 days ago
கடந்த 2004ல் தமிழில் வெளிவந்த 'செல்லமே' படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்திருந்தார் பரத். இதன் பிறகு தமிழில் ஹீரோவாக மட்டும் நடித்து வருகிறார். கடந்த சில வருடங்களாக அவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை.
அதன்பிறகு, 2017ல் வெளிவந்த கடுகு படத்தில் வில்லனாக இருந்து திருந்தும் வகையிலான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இயக்குனர் முத்தையா தன் மகனை கதாநாயகனாக வைத்து இயக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க பரத் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.