ரிபல் படத்தின் டிரைலர் தேதியை அறிவித்த படக்குழு!
ADDED : 619 days ago
ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்து வரும் திரைப்படம் 'ரிபல்'. மமிதா பச்சு, ஆதித்யா பாஸ்கர், கருணாஸ், சுப்ரமணியம் சிவா உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மூணார் பகுதியில் உள்ள கல்லூரியில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.
ரிபல் படம் வருகின்ற மார்ச் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாகுவதைத் தொடர்ந்து தற்போது வருகின்ற மார்ச் 11ம் தேதி அன்று இதன் டிரைலர் வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளனர்.