அட்லி பட ஹீரோயின்களையே ஓரங்கட்டிய பிரியா அட்லி! வைரலாகும் போட்டோக்கள்!!
ADDED : 620 days ago
ஜவான் படத்திற்கு பிறகு தமிழில் விஜய் நடிப்பில் தான் இயக்கிய தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கை தயாரித்து வருகிறார் அட்லி. இதையடுத்து அவர் அல்லு அர்ஜுன் அல்லது விஜய் நடிக்கும் படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது. மேலும், அட்லியும் அவரது மனைவியான பிரியா அட்லியும் தொடர்ந்து தங்களது ரொமான்டிக் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது தான் கிளாமர் போட்டோஷூட் நடத்தி அது குறித்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார் பிரியா அட்லி. அந்த புகைப்படங்கள், அட்லி படங்களில் நடிக்கும் ஹீரோயின்களை விட கவர்ச்சிகரமாக உள்ளது. தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வரும் அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட் குவிந்து வருகின்றன.