மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
570 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
570 days ago
மலையாளத்தில் உருவான ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' திரைப்படம் கேரளாவை விட, தமிழகத்தில் அதிக தியேட்டர்களில் ஓடி வருகிறது. இத்திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. கமல் நடித்து வெளிவந்த 'குணா' படத்தின் 'ரெபரென்ஸ்' தான் இந்தப் படத்தின் இப்படிப்பட்ட வெற்றிக்கு முக்கிய காரணம்.
கமல்ஹாசன் உள்ளிட்ட பல தமிழ்க் கலைஞர்களும் படத்தின் இயக்குனர் சிதம்பரம் மற்றும் படத்தில் நடித்த நடிகர்களை வியந்து பாராட்டினர். இந்த நிலையில், இயக்குனர் சிதம்பரம் மீது பெண் ஒருவர் ‛மீ டூ' குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இன்ஸ்டாகிராம் பிரபலமும் நடிகையுமான ப்ரிப்தி எலிசபெத் என்பவர் சிதம்பரம் பாலியல் குற்றச்சாட்டு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் இயக்கிய முதல் திரைப்படமான ‛ஜான். இ. மேன்' என்ற படத்தில் அம்மு என்ற கேரக்டரில் ப்ரிப்தி எலிசபெத் நடித்திருந்தார். 2021ல் வெளியான இந்த படத்தின் படப்பிடிப்பின் போது தான் தன்னிடம் இயக்குனர் சிதம்பரம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார் ப்ரிப்தி எலிசபெத்.
அவரின் இந்த பதிவுக்கு கீழே பல ரசிகர்களும் சிதம்பரத்திற்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். படம் வெளியாகி 3 ஆண்டுகளாக எதுவும் சொல்லாமல், அடுத்த படம் பெரிய அளவில் வெற்றிப்பெற்றதும் எந்தவித ஆதாரமும் இல்லாமல் இப்படி குற்றச்சாட்டு கூறுவதாக எலிசபெத்துக்கு எதிராகவும் சிலர் பதிவிட்டுள்ளனர்.
570 days ago
570 days ago