அப்பாவுக்கு முத்தம் கொடுத்தால் தப்பா? - இந்திரஜா சங்கர்
ADDED : 584 days ago
பிரபல நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கருக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இந்திரஜா தனது தந்தை ரோபோ சங்கருக்கு உதட்டின் மீது முத்தம் கொடுக்கும் புகைப்படம் இணையத்தில் நெகட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனையடுத்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள இந்திரஜா, 'என்னுடைய அப்பாவிற்கு நான் உதட்டில் முத்தம் கொடுத்தால் என்ன தப்பு? சின்ன குழந்தையிலிருந்தே இப்படி முத்தம் கொடுத்து பழகிவிட்டேன். இப்போது கல்யாணம் ஆகப்போகிறது என்றால் அதற்காக எங்க அப்பாவை விட்டு நான் விலக வேண்டுமா?. நான் என் அப்பாவிற்கு கொடுத்த முத்தத்தை தவறாக பேசுபவர்கள் அவர்கள் கண்களை தான் சரி செய்து கொள்ள வேண்டும்' என்று கூறியுள்ளார்.