கர்ப்பகாலத்திலும் பட புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமலாபால்
ADDED : 582 days ago
கடந்த ஆண்டு ஜெகத் தேசாய் என்பவரை மறுமணம் செய்து கொண்டார் நடிகை அமலாபால். அதையடுத்து இரண்டு மாதங்களில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இந்த நிலையில் மலையாளத்தில் பிரித்விராஜிற்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ள ‛தி கோட் லைப் - ஆடு ஜீவிதம்' என்ற படம் மார்ச் 28ம் தேதி திரைக்கு வருகிறது. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழியில் இந்த படம் வெளியாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று கேரளாவில் நடைபெற்ற நிலையில் அதில் கணவர் உடன் கலந்து கொண்டுள்ளார் அமலாபால்.
இன்றைக்கு பல நடிகர், நடிகைகள் தாங்கள் நடித்த படங்களின் புரொமோஷன் நிகழ்ச்சிக்கு வர மறுக்கும் சூழலில் கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் தான் நடித்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.