ரோமியோ படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ
ADDED : 653 days ago
நடிகர் விஜய் ஆண்டனி கைவசம் இரண்டு, மூன்று படங்கள் உள்ளன. இவற்றில் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் முதல் முறையாக 'ரோமியோ' என்கிற லவ் படத்தில் நடித்து வருகிறார். விஜய் ஆண்டனி உடன் இணைந்து மிருணாளி ரவி, தலைவாசல் விஜய், இளவரசு, வி.டி.வி.கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்தது. ஏற்கனவே இப்படம் சம்மருக்கு திரைக்கு வரும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது கிடைத்த தகவலின் படி, ரோமியோ திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 11ம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்கிறார்கள்.