ஜப்பானில் ஒரு நிமிடத்தில் விற்று தீர்ந்த ‛ஆர்ஆர்ஆர்' டிக்கெட்
ADDED : 574 days ago
ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா, சமுத்திரகனி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‛ஆர்ஆர்ஆர்'. ரூ.1000 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்ததோடு ‛நாட்டு நாட்டு' பாடலுக்காக ஆஸ்கர், கோல்டன் குளோப் போன்ற விருதுகளையும் வென்றது.
இந்தபடம் ஏற்கனவே ஜப்பானில் வெளியாகி அங்கும் வசூலை குவித்த நிலையில் இப்போது மார்ச் 18ல் டோக்கியோவில் உள்ள தியேட்டரில் இந்தபடம் மீண்டும் சிறப்பு திரையிடலாக வெளியாகிறது. இதில் ராஜமவுலி பங்கேற்கிறார். இதற்கான டிக்கெட் முன்பதிவு துவங்கிய ஒரு நிமிடத்திற்குள்ளேயே மொத்த டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. இதுபற்றிய தகவலை ஆர்ஆர்ஆர் படக்குழு பெருமையாக தங்களது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.