கல்கி படப்பிடிப்பை முடித்து ஹைதராபாத் திரும்பிய பிரபாஸ்
ADDED : 567 days ago
ஆதிபுருஷ் மற்றும் சலார் ஆகிய படங்களை முடித்த கையோடு நடிகர் பிரபாஸ் கொஞ்ச நாள் ஓய்வெடுக்க விரும்பி சினிமாவை விட்டு ஒதுங்கி வெளிநாடுகளில் தங்கியிருந்தார். இவர் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டில் தங்கி இருந்ததாகவும் சொல்லப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் ‛கல்கி 2898 ஏடி' படத்தின் படப்பிடிப்பில் கடந்த சில நாட்களாக கலந்து கொண்டு நடித்து வந்தார் பிரபாஸ்.
இத்தாலியில் நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து, தற்போது ஹைதராபாத் திரும்பியுள்ளார் பிரபாஸ். சயின்ஸ் பிக்சன் திரில்லராக உருவாகி வரும் இந்த படத்தில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.