‛கோழிப்பண்ணை செல்லதுரை' ஹீரோவுக்கு யோகிபாபு சொன்ன அட்வைஸ்
ADDED : 572 days ago
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‛கோழிப்பண்ணை செல்லதுரை'. இந்த படத்தில் கதாநாயகனாக ஏகன் என்பவர் நடித்துள்ளார். முக்கியமான வேடத்தில் யோகி பாபு நடித்திருக்கிறார். கனா காணும் காலங்கள் தொடர் மூலம் வெளிச்சம் பெற்ற ஏகன், அதன்பிறகு 'ஜோ' என்கிற படத்தில் ஒரு அறிமுக நடிகராக வெளிப்பட்டார். அதை தொடர்ந்து தான் இந்த கோழிப்பண்ணை செல்லதுரை பட வாய்ப்பு அவரை தேடி வந்தது.
இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இவரது நடிப்பை பார்த்த யோகிபாபு, இவரை தனது கேரவனுக்குள் அழைத்து, “நன்றாக நடிக்கிறாய். அப்படியே அதை தக்க வைத்துக்கொள். அது மட்டுமல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடி. பணத்தின் பின் போகாதே” என்று ஓர் அறிவுரையும் கூறியுள்ளார். இதனை ஏகன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.