உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி!

இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி!


தற்போது பிரதர், ஜீனி, தக்லைப் போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இதில் அர்ஜுனன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் ஜீனி படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கிருத்தி செட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா ஆகியோர் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது.

இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் ரயிலில் அமைக்கப்பட்ட செட்டில் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரம் படப்பிடிப்பு நடந்ததும், மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஜீனி படத்தை ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தை தயாரித்த வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !