உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ரத்னம்' இசை வெளியீடு : மாநாடு நடத்த விஷால் திட்டம் ?

'ரத்னம்' இசை வெளியீடு : மாநாடு நடத்த விஷால் திட்டம் ?

ஹரி இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், விஷால், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் 'ரத்னம்'. விஷாலின் அடுத்த படமாக வெளிவர உள்ள இந்தப் படத்தின் முதல் சிங்கிளான 'டோன்ட் வொர்ரி' பாடல் பத்து நாட்களுக்கு முன்பு வெளியானது.

தனது கடைசி படமான 'மார்க் ஆண்டனி' படம் வெற்றிகரமாக ஒடி ரூ.100 கோடி வசூலைக் கடந்ததால் இந்த 'ரத்னம்' படத்தையும் அது போல பெரிய அளவில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று விஷால் நினைக்கிறாராம்.

அரசியலிலும் ஒரு காலை அவ்வப்போது எடுத்து வைக்கும் விஷால், 'ரத்னம்' படத்தின் இசை வெளியீட்டை பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறார் என்று தகவல். அவரது ரசிகர்களை ஒன்று திரட்டி மாநாடு போல நடத்த முடிவெடுத்துள்ளாராம். அடுத்த மாதம் திருச்சியில் அந்த மாநாடும், அதில் இசை வெளியீடும் நடக்கும் எனத் தெரிகிறது.

லோக்சபா தேர்தல் பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ள நிலையில் அவ்வப்போது அரசியல் கருத்துக்களையும் விஷால் தெரிவிக்க வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !