‛ஓ.ஜி' படத்திலிருந்து இம்ரான் ஹாஸ்மி முதல் பார்வை வெளியானது
ADDED : 641 days ago
சாஹோ பட இயக்குனர் சுஜித் இயக்கத்தில் நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஓ.ஜி' . பிரகாஷ் ராஜ், பிரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ், ஸ்ரேயா ரெட்டி, இம்ரான் ஹாஸ்மி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டிவிவி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படம் வருகின்ற செப்டம்பர் 27ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் நடிகர் இம்ரான் ஹாஸ்மி பிறந்தநாளை முன்னிட்டு இதில் அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் படக்குழு அவரது முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இவர் ஹிந்தியில் மர்டர், டர்டி பிக்சர் உள்ளிட்ட பல வித்தியாசமான படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த டைகர் 3 படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.