மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
532 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
532 days ago
இந்திய சினிமா பிரபலங்களுக்கு வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் மெழுகுச்சிலை அமைக்கப்பட்டு கவுரவிப்பது என்பது அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் அல்லு அர்ஜுன் கடந்த இரண்டு வருடங்களில் ;புஷ்பா' படம் மூலமாக இந்தியாவையும் தாண்டி வெளிநாடுகளிலும் ரசிகர்களை பெறும் அளவிற்கு புகழ்பெற்றுள்ளார்.
அந்த வகையில் துபாயில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அல்லு அர்ஜுனின் மெழுகுச்சிலை இடம்பெற உள்ளது. இதற்காக கடந்த வருடம் இந்த சிலையை செய்வதற்கு தேவைப்படும் அல்லு அர்ஜுனனின் 200 விதமான புகைப்படங்கள் மற்றும் அளவுகள் எடுக்கப்பட்டன.
இந்த நிலையில் வரும் மார்ச் 28ஆம் தேதி மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் இந்த சிலை திறப்பு விழா நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்த விழாவில் கலந்து கொள்ள தனது குடும்பத்துடன் அல்லு அர்ஜுன் துபாய் கிளம்பி சென்றுள்ளார். விமான நிலையத்தில் அவர் தனது குடும்பத்துடன் கிளம்பிச் செல்லும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தற்போது வெளியாகி உள்ளன.
532 days ago
532 days ago