மீண்டும் தமிழுக்கு வரும் சமந்தா
ADDED : 608 days ago
தமிழில் கடந்த 2022ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்தார் சமந்தா. அப்படத்தில் நயன்தாராவும் இன்னொரு நாயகியாக நடித்திருந்தார். அதன்பிறகு யசோதா, சாகுந்தலம் போன்ற தெலுங்கு படங்களில் கதையின் நாயகியாக நடித்தவர் பின்னர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக குஷி படத்தில் நடித்தார். தற்போது சிட்டாடல் வெப் தொடரில் நடித்துள்ளார். மேலும் தான் கதையின் நாயகியாக நடித்த சில படங்கள் தோல்வியாக அமைந்ததால் தொடர்ந்து கதையின் நாயகியாக நடிப்பதை தவிர்க்கும் சமந்தா, அடுத்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கி இருக்கிறார். அதன் காரணமாக தமிழில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பதற்கு சில இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறார் சமந்தா.