மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு!
ADDED : 556 days ago
இயக்குனர் ரத்ன குமார் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், ஹாரர் த்ரில்லர் ஜானரில் நடிக்கவுள்ளார் என கூறப்பட்டு வந்தது. பின்னர் இப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் ரத்ன குமாருக்கு அதிர்ஷ்டம் அடித்தது போல் மீண்டும் இத்திரைப்படத்தை பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு தொடங்கியுள்ளனர். இப்போது இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.