மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்!
ADDED : 604 days ago
விஜய் சேதுபதி - திரிஷா நடித்த ‛96' என்ற படத்தில் இளம் வயது திரிஷாவாக நடித்தவர் கவுரி கிஷன். அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர். இவர்கள் இருவரும் இணைந்து தற்போது ‛ஹாட்ஸ்பாட்' என்ற ஒரு ஆந்தாலஜி படத்தில் நடித்துள்ளார்கள். அப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது.
இந்நிலையில் ஹாட் ஸ்பாட் படப்பிடிப்பின்போது ஆதித்யா பாஸ்கரின் கழுத்தில் தான் தாலி கட்டுவது போன்று எடுத்த ஒரு புகைப்படத்தை, இப்படத்தின் புரமோஷனுக்காக இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார் கவுரி கிஷன். ஆனால் இது புரமோஷனுக்காக வெளியிடப்பட்ட புகைப்படம் என்பது தெரியாமல் உண்மையான திருமணம் என்று நினைத்து ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.