நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா!
ADDED : 556 days ago
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன், விஜய் நடித்த லியோ படங்களுக்கு பிறகு திரிஷாவின் மார்க்கெட் உச்சத்துக்கு சென்று விட்டது. தற்போது கமலின் தக்லைப், அஜித்தின் விடாமுயற்சி, சிரஞ்சீவியின் விஷ்வாம்பரா, மோகன்லாலின் ராம், நிவின் பாலி ஐடென்டிட்டி என ஐந்து மெகா ஹீரோக்களின் படங்கள் அவர் கைவசம் உள்ளன. அதோடு, தற்போது விஜய் நடித்து வரும் ‛கோட்' படத்திலும் ஒரு பாடலில் அவருடன் இணைந்து நடனம் ஆடுகிறார்.
இதன் காரணமாக 5 கோடி சம்பளம் வாங்கி வந்த திரிஷா தற்போது தனது சம்பளத்தை 12 கோடியாக உயர்த்தியுள்ளார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வந்த நயன்தாராவை பின்தள்ளி முதலிடத்திற்கு வந்துள்ளார் திரிஷா.