இளையராஜா படத்தின் புதிய அப்டேட்!
ADDED : 567 days ago
இசையமைப்பாளர் இளையராஜா இந்திய சினிமாவில் இதுவரை 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு, படமாக உருவாகிறது. இதில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்கிறார். இப்படத்தை கன்னெக்ட் மீடியா மற்றும் மெர்குரி என இரு நிறுவனங்கள் தயாரிக்கின்றன. 'இளையராஜா' என இப்படத்திற்கு தலைப்பு வைத்துள்ளதாக அறிவித்தனர்.
அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த படத்திற்கு திரைக்கதை கமல்ஹாசன் எழுதுவதாக கூறப்பட்டு வந்தது. தொடர்ந்து ஒரு சில காரணங்களால் கமல்ஹாசனால் இதற்கு திரைக்கதை எழுத முடியாத காரணத்தால் இப்போது இந்த பொறுப்பை தனுஷ் எடுத்து இந்த படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுத உள்ளதாக படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.