மீண்டும் இணைந்த தசரா படக் கூட்டணி!
ADDED : 567 days ago
அறிமுக இயக்குனர் ஸ்ரீ காந்த் ஓடிலா இயக்கத்தில் நடிகர் நானி நடித்து கடந்த ஆண்டில் வெளிவந்த திரைப்படம் 'தசரா'. இந்த படம் நானிக்கு முதல் ரூ.100 கோடி வசூலித்த படமாக அமைந்தது. கடந்த சில மாதங்களாக மீண்டும் இந்த வெற்றிக் கூட்டணி இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியானது. தற்போது அது உறுதியாகியுள்ளது. இன்று தசரா படம் வெளிவந்து ஒரு ஆண்டு ஆனதை முன்னிட்டு நானி, ஸ்ரீ காந்த் ஓடிலா கூட்டணியில் நானியின் 33வது படம் உருவாகும் என அறிவித்துள்ளனர்.