25 வருட கார் கனவு : ஆனந்தத்தில் அர்ச்சனா
ADDED : 668 days ago
சின்னத்திரை தொகுப்பாளினி அர்ச்சனா தனது நீண்டநாள் கனவான மெர்சிடஸ் பென்ஸ் சொகுசு காரை வாங்கியுள்ளார். அவர் வாங்கிய காரின் மதிப்பு ரூ.75 லட்சம். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ள அர்ச்சனா, ‛இதற்காக 25 வருடம் கஷ்டப்பட்டு உழைத்தேன்' என எமோஷ்னலாக பேசி கண்ணீர் வடிக்கிறார். அவரை போலவே அவரது தாயார், தங்கை, மகள் என அனைவரும் தங்கள் கனவு நனவான மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடிக்கின்றனர். இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வர அர்ச்சனாவின் உழைப்பை பாராட்டி பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.