14 வருடங்களுக்கு பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் பையா
ADDED : 551 days ago
கடந்த 2010ல் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடிப்பில் வெளியான படம் பையா. இந்த படம் 14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு வருகிற ஏப்ரல் 11ம் தேதி ரிலீஸ் செய்யப்படவுள்ளது. மேலும், பருத்திவீரன் படத்தில் முரட்டுத்தனமான கிராமத்து இளைஞனாக நடித்திருந்த கார்த்தி இந்த பையா படத்தில் நகரத்து இளைஞனாக காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் மென்மையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியான நேரத்தில் கார்த்தி, தமன்னா ஜோடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதோடு இந்த படமும், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இந்த படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.