மே 24ல் திரைக்கு வரும் இந்தியன் 2?
ADDED : 547 days ago
1996ல் இந்தியன் படத்தில் கூட்டணி அமைத்த நடிகர் கமலும், இயக்குனர் ஷங்கரும் மீண்டும் இணைந்துள்ள படம் இந்தியன் 2. கமலுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதோடு இன்னொரு பக்கம் இந்தியன்-3 படத்திற்கான காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியன் 2 படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளிலும் மே 24ம் தேதி வெளியாக இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.