மேலும் செய்திகள்
கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்'
546 days ago
சிம்பு மீது அதிருப்தியில் தமன்?
546 days ago
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத்பாசில் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'புஷ்பா 2'. ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டீசர் ஏப்ரல் 8ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
ஏப்ரல் 8ம் தேதி அல்லு அர்ஜுனின் பிறந்தநாள், அதை முன்னிட்டு படக்குழுவினர் டீசரை வெளியிடுகிறார்கள். இதற்காக புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள். அதில் காலில் சலங்கையுடன் இருக்கும் ஒரு போஸ்டர் வெளியாகி உள்ளது. அந்தக் கால் அல்லு அர்ஜுனின் கால் என்பதில் சந்தேகமில்லை.
டீசர் வெளியாக இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகம் பெரிய வசூலைக் குவிக்கும் என டோலிவுட்டில் எதிர்பார்க்கிறார்கள். அதற்கு டீசர் முன்னுதாரணமாய் இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
546 days ago
546 days ago