செப் தாமுவின் இளம் வயது புகைப்படம் வைரல்
ADDED : 659 days ago
பிரபல சமையல் கலைஞரான செப் தாமு, ‛குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் செலிபிரேட்டியாக மாறியுள்ளார். சோஷியல் மீடியாக்களில் அவருக்கு ரசிகர்கள் அதிகமாகிவிட்டனர். அவரும் மற்ற செலிபிரேட்டிகளை போலவே தன் அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் அண்மையில் திருமணத்திற்கு முன் எடுத்த தனது இளமைகால புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படமானது தற்போது வைரலாகி செப் தாமுவா இவர்? என ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.