உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அதிதி ராவுக்கு சித்தார்த் கொடுத்த உறுதிமொழி

அதிதி ராவுக்கு சித்தார்த் கொடுத்த உறுதிமொழி

நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் காதலிப்பதாக பல மாதங்களாகவே செய்திகள் வெளியாகி வந்த நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் தெலுங்கானாவில் உள்ள ஒரு கோவிலில் அவர்களின் திருமண நிச்சயார்த்தம் எளிமையான முறையில் நடைபெற்றது. அந்த நிச்சயதார்த்தத்தின் போது தாங்கள் விரலில் மாட்டிக் கொண்ட மோதிரத்தை அவர்கள் இருவரும் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார்கள்.

இந்த நிலையில் அதிதி ராவுக்கு சித்தார்த் முக்கிய உறுதிமொழி கொடுத்துள்ளாராம். அது என்னவென்றால், திருமணத்திற்கு பிறகும் விருப்பப்பட்டால் தொடர்ந்து நடிக்கலாம். எப்படிப்பட்ட கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பதை அவரே முடிவு செய்து கொள்ளலாம். படப்பிடிப்புக்கு எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். அதற்கு எந்த தடையும் இல்லை என்று உறுதிமொழி வழங்கியிருக்கிறாராம். அதோடு, அதிதி ராவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவும் திட்டமிட்டுள்ளாராம் சித்தார்த்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !