விக்ரம் படத்தில் இணைந்த துஷாரா விஜயன்
ADDED : 551 days ago
சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன். தற்போது ரஜினிகாந்தின் ‛வேட்டையன்', தனுஷின் ‛ராயன்' போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62வது படத்தில் நடிக்கவுள்ளார். ஏற்கனவே இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என அறிவித்து இருந்தனர். இப்போது துஷாரா விஜயன் இந்த படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். சிபு தமின்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார்.