விஜய்யின் அம்மா ஷோபாவிடம் ஆசீர்வாதம் பெற்ற வனிதா விஜயகுமார்!
ADDED : 558 days ago
விஜய் நடித்த சந்திரலேகா என்ற படத்தில்தான் வனிதா விஜயகுமார் அறிமுகமானார். அதன் பிறகு மாணிக்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர், சமீப காலமாக குணச்சித்ர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பார்த்திபன் இயக்கியுள்ள டீன்ஸ் படத்தின் இசை விழாவுக்கு வந்திருந்த விஜய்யின் தாயாரான ஷோபா சந்திரசேகரனுடன் தான் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ள வனிதா விஜயகுமார், ஷோபா ஆன்ட்டியை நீண்ட இடைவெளிக்கு பிறகு டீன்ஸ் படத்தின் இசை விழாவில் பார்த்தேன்.
அவரது அன்பான வார்த்தைகளும் ஆசீர்வாதமும் எனக்கும், என்னுடைய மகள் ஜோவிகாவுக்கும் கிடைத்தது என்று பதிவிட்டுள்ளார். மேலும், வனிதாவின் மகள் ஜோவிகா பார்த்திபன் இயக்கியுள்ள டீன்ஸ் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.