உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛விஜய் 69' படத்தில் நடிக்க 4 நடிகைகளிடம் பேச்சுவார்த்தை!

‛விஜய் 69' படத்தில் நடிக்க 4 நடிகைகளிடம் பேச்சுவார்த்தை!


தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‛கோட்' படத்தில் நடித்து வரும் விஜய், அதை அடுத்து தனது கடைசி படமான 69 வது படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்தை சதுரங்க வேட்டை, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களை இயக்கிய எச். வினோத் இயக்குகிறார். இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பதற்கு தமிழ் நடிகைகளான திரிஷா, சமந்தா மற்றும் பாலிவுட் நடிகைகள் ஆலியா பட், மிருணாள் தாக்கூர் ஆகியோரிடத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், தற்போது கோட் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதால் விரைவில் விஜய் 69வது படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !