நடிகை மஞ்சு வாரியர் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை
ADDED : 548 days ago
தமிழகத்தில் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்களின் வாகனங்கள் உட்பட பலவற்றை நிறுத்தியும் சோதனை மேற்கொள்கின்றனர். அந்த வகையில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் இன்று (ஏப்.7) கேரளாவில் இருந்து திருச்சி நோக்கி காரில் வந்துக்கொண்டிருந்தார். அப்போது திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மஞ்சு வாரியர் காரை நிறுத்திய தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். நடிகையின் காரை நிறுத்தி சோதனை நடத்தியபோது அங்கிருந்த பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.