கனவு அலுவலகம் திறந்தார் நயன்தாரா
ADDED : 549 days ago
நடிகை நயன்தாரா தற்போது நடிப்பு என்பதை தாண்டி பல தொழில்களை செய்து வருகிறார். படத் தயாரிப்பு ஒருபக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் அழகு சாதன பொருள்கள் விற்பனை நிறுவனம் ஒன்றிலும் பங்குதாரராக இருக்கிறார். இதுதவிர கேரளா, தமிழ்நாடு, ஆந்திராவில் சொத்துக்கள் உள்ளன. இந்நிலையில் தனது வீட்டு மொட்டை மாடியில் புதிய அலுவலகம் ஒன்றை திறந்திருக்கிறார். இதனை தனது 'கனவு அலுவலகம்' என்று அவர் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “எங்கள் கனவு அலுவலகம் அமைந்தது ஒரு மாயாஜாலம் போன்று இருக்கிறது. சாத்தியமில்லாத ஒன்றை 30 நாளில் சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள். இதை உருவாக்கியவர்கள் சிறந்த மனிதர்கள்” என்று கூறியுள்ளார்.
இந்த அலுவலகத்தின் பெரும்பகுதி கண்ணாடியை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.