5 மொழிகளில் வெளியாகும் வரலட்சுமியின் திரில்லர் படம்
ADDED : 587 days ago
சோலா ஹீரோயின் படங்கள் அதிக அளவில் வெளிவருகிறது. அதில் முன்னணி ஹீரோயின்கள் மட்டுமல்ல அடுத்த வரிசையில் உள்ள ஹீரோயின்களும் ஆர்வத்துடன் நடித்து வருகிறார்கள். அந்த வரிசையில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள படம் 'சபரி'. இந்த படத்தில் கணேஷ் வெங்கட்ராம், மதுநந்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் அனில் இயக்கியுள்ள இந்த படத்துக்கு கோபிசுந்தர் இசையமைத்துள்ளார்.
இந்த படம் வருகிற மே 3ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தில் ஒரு பெரிய கொடூர கொலைகார கூட்டத்திடம் இருந்து தன் மகளை காப்பாற்றும் தாயாக வரலட்சுமி நடித்துள்ளார்.