முடிவுக்கு வருகிறது தமிழும் சரஸ்வதியும் சீரியல்
ADDED : 550 days ago
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் தொடருக்கு மக்களின் பேராதரவு கிடைத்து வருகிறது. கிட்டத்தட்ட 700 எபிசோடுகளை கடந்துள்ள இந்த தொடர் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இது தொடர்பான பதிவுகளை இந்த சீரியலில் நடித்த நடிகர்கள் தங்கள் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகின்றனர். இந்த மாதத்துடன் இந்த சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொடரை இயக்கி வந்த குமரன் தற்போது வீட்டுக்கு வீடு வாசல் படி என்கிற புதிய தொடரை இயக்கி வருகிறார். தமிழும் சரஸ்வதியும் தொடர் முடிந்த பின் குமரன் இயக்கும் வீட்டுக்கு வீடு வாசல் படி தொடர் தான் அதே நேரத்தில் ஒளிபரப்பாக உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.