மஹாலெட்சுமி தான் என் உலகம் - ரவீந்தர் உருக்கம்
ADDED : 596 days ago
பிரபல சினிமா தயாரிப்பாளரான ரவீந்திரன் சந்திரசேகர், சின்னத்திரை நடிகை மஹாலெட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதுமுதலே சோஷியல் மீடியாவில் தொடர்ந்து டிரெண்டாகி வரும் ரவீந்தர், பண மோசடி வழக்கு, ஐசியுவில் சிகிச்சை என பேசு பொருளானார். இந்நிலையில், அவர் 'என்னுடைய உலகத்தை மிகவும் மோசமாக மிஸ் செய்கிறேன்' என்று இன்ஸ்டாவில் பதிவிட, அதை பார்த்த பலரும் மஹாலெட்சுமியுடன் விவாகரத்தா? என கேட்டு வருகின்றனர். அதற்கு பதிலளித்த ரவீந்தர், 'எனக்கு எஞ்சி இருக்கும் ஒரே உலகம் மஹாலெட்சுமி தான். அதனால் நீங்கள் கடினமாக பிரார்த்தனை செய்யுங்கள். ஆனால், நீங்கள் நினைப்பது ஒருபோதும் நடக்காது' என பதிலடி கொடுத்துள்ளார்.