தெலுங்கில் ‛பாக்' ஆக வெளியாகும் ‛அரண்மனை 4'
ADDED : 546 days ago
சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 1, 2, 3 ஆகிய பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அரண்மனை படத்தின் 4ம் பாகத்தை இயக்கி, அதில் அவரே கதாநாயகனாகவும் சுந்தர் சி நடித்துள்ளார். தமன்னா, ராஷி கண்ணா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். யோகி பாபு, வி.டி.வி.கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
முந்தைய மூன்று பாகங்களை விட இன்னும் பிரமாண்டமாய் உருவாகி உள்ளது. ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படம் தெலுங்கில் 'பாக்' என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ரிலீஸாகிறது. இதனை ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் ஏசியன் சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகின்றனர்.