கன்னடம் கலந்த மலையாளத்தில் பேசும் பஹத் பாசில்
ADDED : 625 days ago
கடந்த வருடம் வெளியான மாமன்னன் படத்திற்கு பிறகு பஹத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள ஆவேசம் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. மாமன்னன் படத்தில் ஒரு ஜாதிக்கட்சி தலைவராக வில்லத்தனம் காட்டி மிரட்டிய பஹத் பாசில் 'ஆவேசம்' படத்தில் ஒரு கேங்ஸ்டர் ஆக நடித்துள்ளார். இதற்காக வித்தியாசமான முறையில் இவரது தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல இவர் பெங்களூரைச் சேர்ந்த ஒரு தாதா என்பதால் கன்னடம், மலையாளம் கலந்து ஒரு புதுவிதமான பாஷையை இந்த படத்தில் பேசி நடித்துள்ளாராம். கடந்த வருடம் ஹாரர் காமெடி கலந்து வெளியான 'ரோமாஞ்சம்' என்கிற ஹிட் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கியுள்ளார். பஹத் பாசிலின் மனைவி நஸ்ரியாவும், இயக்குனர் அன்வர் ரஷீத்தும் இணைந்து தயாரித்துள்ளனர்.