கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா
ADDED : 550 days ago
விஜய் தேவரகொண்டா உடன் நடித்த குஷி படத்தை அடுத்து எந்த புதிய படங்களிலும் கமிட்டாகாமல் இருக்கிறார் சமந்தா. தற்போது சிட்டாடல் வெப் சீரியலில் நடித்துள்ள அவர், அடுத்தபடியாக தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதற்காக இயக்குனர்களிடத்தில் கதை கேட்டு வருகிறார். சமீபகாலமாக தன்னுடைய படு கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட தொடங்கி இருக்கும் சமந்தா, தற்போது தனது இன்ஸ்டாகிராமில் உள்ளாடை அணியாமல் வெறும் கோட் மட்டும் அணிந்த ஒரு கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அவரது இந்த புகைப்படம் இதுவரை இல்லாத அளவுக்கு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இந்த புகைப்படத்தை வெளியிட்டு பேஷன் பேபி என்றும் கேப்ஷன் கொடுத்திருக்கிறார் சமந்தா.