தேசிய விருது பெற்ற திரைப்படத்தில் ஹீரோவாகும் விஷ்ணு
ADDED : 624 days ago
சின்னத்திரையில் கனா காணும் காலங்கள், ஆபிஸ், சத்யா, சொல்ல மறந்த கதை ஆகிய தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விஷ்ணு. வெள்ளித்திரையில் 2017ம் ஆண்டில் இவன் யார் என்று தெரிகிறதா? என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால், அதன்பின் அவருக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதற்கிடையில் சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய விஷ்ணுவுக்கு மீண்டும் வெள்ளித்திரை கதவு திறந்துள்ளது. தெலுங்கில் வெளியாகி தேசிய விருது பெற்ற 'சி லா சோவ்' என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் விஷ்ணு நடிக்க இருக்கிறார். இந்த செய்தியானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பலரும் விஷ்ணுவின் இந்த புதிய பயணம் வெற்றிபெற வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.