லாரன்ஸின் ‛ஹண்டர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் புலி
ADDED : 595 days ago
தமிழ் புத்தாண்டை ஒட்டி நேற்று ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ், ஹண்டர் என்ற இரண்டு படங்களின் போஸ்டர் வெளியானது. இதில், ஹண்டர் அவரது 25வது படமாகும். லாரன்ஸ் இரண்டு விதமான கெட்டப்பில் நடிக்கும் இந்த படத்தை வெங்கட் மோகன் இயக்குகிறார். ஜூன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தில் லாரன்ஸ் ஜோடியாக ஒரு பாலிவுட் நடிகையும், வில்லனாக ஒரு பாலிவுட் நடிகரும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுமட்டுமின்றி, இந்த படத்தில் ஒரு புலியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறது. ஹீரோவுக்கும், புலிக்கும் இடையிலான நட்பு மற்றும் நெகிழ்ச்சியான பல சம்பவங்களும் இந்த படத்தில் இடம் பெறுவதாக கூறுகிறார்கள்.