ரூ.50 கோடி வசூலை கடந்த பஹத் பாசிலின் ஆவேசம்
ADDED : 506 days ago
மலையாளத்தில் உருவான மஞ்சும்மேல் பாய்ஸ் என்ற படம் மலையாளம், தமிழ் உள்பட பல மொழி ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதையடுத்து வெளியான பிரேமலு, ஆடு ஜீவிதம் போன்ற மலையாள படங்களும் கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் வரவேற்பை பெற்றன. இந்த இரண்டு படங்களுமே ரூ.100 கோடி வசூலை கடந்துவிட்டன. இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் பஹத் பாசில் நாயகனாக நடித்துள்ள ஆவேசம் என்ற படம் திரைக்கு வந்து ஐந்து நாட்களில் ரூ.50 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. வித்தியாசமான கேங்ஸ்டர் கதைகளத்தில் இந்தப்படம் வெளியானது. இதில் பஹத் பாசில் ரவுடி வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் கேரளாவை போலவே தமிழ்நாட்டிலும் ஓரளவுக்கு வரவேற்பு பெற்று வருகிறது.