நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ்
ADDED : 584 days ago
சின்னத்திரை நடிகையான காயத்ரி, ‛சரவணன் மீனாட்சி, அரண்மனைக்கிளி, நாம் இருவர் நமக்கு இருவர்' என பல ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார். நடன இயக்குநரான யுவராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட காயத்ரி அண்மையில் தான் தனது கனவு இல்லத்தை கட்டி முடித்த மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், அவர் தற்போது சொந்தமாக நடன பயிற்சி பள்ளி ஒன்றை தொடங்கியுள்ள செய்தியை இண்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். தனது நடன பள்ளிக்கு ரிதமெடிக் பீட் டான்ஸ் கோர்ட் என பெயர் வைத்துள்ளார். இந்த நடன பள்ளியை நடிகரும், நடன இயக்குநருமான ராம்ஜி திறந்து வைத்துள்ளார். மேலும் அந்த நிகழ்ச்சியில் நடிகர் ஆரி, புகழ் உள்ளிட்ட பல சின்னத்திரை பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர்.