உயிருக்கே ஆபத்தாகி விடும்! தமிழக அரசு இதற்கு தடை விதிக்க வேண்டும்!! இயக்குனர் மோகன் ஜி வெளியிட்ட பகீர் வீடியோ
ADDED : 544 days ago
பழைய வண்ணாரப்பேட்டை, திரவுபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் போன்ற படங்களை இயக்கியவர் மோகன் ஜி. இவர் தற்போது தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு அதிர்ச்சி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில், ஒரு சிறுவன் ஸ்மோக் பிஸ்கட் ஒன்றை வாங்கி சாப்பிடுகிறான். ஆனால் அதை வாயில் போட்டதுமே அவன் வலியால் துடிக்கிறான்.
இதுகுறித்து இயக்குனர் மோகன் ஜி வெளியிட்டுள்ள பதிவில், ‛இதுபோன்று விற்கும் ஸ்மோக் பிஸ்கட் என்ற தின்பண்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும். குழந்தைகள் புகையை பார்த்து ஆசையாக சாப்பிட அடம்பிடிப்பார்கள். அதில் ஊற்றப்படுவது லிக்யூட் நைட்ரஜன். ஒரு ஸ்பூன் உட்கொண்டால் கூட உயிருக்கே ஆபத்து. அதனால் தமிழக அரசு இதற்கு தடை விதிக்க வேண்டும்' என்று அவர் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார்.