டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு
ADDED : 537 days ago
கமல்ஹாசன் - மணிரத்னம் மீண்டும் இணைந்திருக்கும் தக்லைப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக ராஜஸ்தானில் உள்ள பாலைவனப் பகுதியில் நடைபெற்று வந்தது. அங்கு சிம்பு நடித்த பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்த நிலையில் நாளை முதல் தக் லைப் படத்தின் படப்பிடிப்பு 20 நாட்களுக்கு டில்லியில் நடைபெற இருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று விட்டதால் ஓரிரு மாதங்கள் தக்லைப் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாத கமல், இந்த படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்ளப் போகிறார். அந்த வகையில், டில்லியில் கமல், சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் நடிக்கும் ஆக்ஷன் காட்சிகள் படமாகிறது. இங்கு படப்பிடிப்பு நடந்து முடிந்த பிறகு அடுத்த கட்ட படப்பிடிப்பில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் பங்கேற்று நடிக்க இருப்பதாகவும் படகுழு வட்டாரங்களில் கூறுகிறார்கள்.