உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன்

ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன்

தனுஷ் தனது 50வது படமான 'ராயன்' என்கிற படத்தை இயக்கி, நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ராயன் படத்தை ஜூன் மாதத்தில் வெளியிட திட்டமிட்டனர். ஆனால் ஜூன் மாதத்தில் இந்தியன் 2, கல்கி ஏ.டி 2898 போன்ற மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகும் படங்கள் வெளியாவதால் ராயன் படத்தை ஜூலை மாதம் இரண்டாம் வாரத்தில் வெளியிட திட்டமிட்டு வருவதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !