ஆபாச தாக்குதல் : ஈஷா ரெப்பா போலீஸில் புகார்
ADDED : 5 days ago
தமிழ், தெலுங்கில் நடித்து வருகிறார் ஈஷா ரெப்பா. தமிழில் ஓய், நித்தம் ஒரு வானம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் அதிகம் நடிக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் ஓம் சாந்தி சாந்தி சாந்தி என்ற படம் ரிலீஸானது. வலைதளங்களில் இவர் மீது ஆபாச தாக்குதல் நடந்துள்ளது. இதுபற்றி ஐதராபாத், பஞ்சாரா ஹில்ஸ் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
அதில், ‛‛நான் பட விழாக்களில் கலந்த போட்டோக்கள் மற்றும் பேசிய விஷயங்களை திரித்து வலைதளங்களில் சிலர் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் வெளியிடுகின்றனர். இவை என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.